எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக அரசை மக்கள் நிச்சயம் துரத்தி அடிப்பார்கள் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் நம்பிக்கை..
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. புதுவை முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் அம்மாவின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பாக கொண்டாட வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் அன்பழகன்,
புதுச்சேரியை ஆளும் பாஜக -என்.ஆர் காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத செயல்கள், செயல்படாத தன்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் இயக்கமாக அதிமுக இருக்கும் என்றும், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக ஆளும் கட்சியினருக்கு கிளை கழகமாக செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக அரசை மக்கள் நிச்சயமாக துரத்தி அடிப்பார்கள் என்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி மலரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரியில் நிதி நெருக்கடி இருப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு விழாக்களில் தெரிவித்து வரும் நிலையில், புதுச்சேரியில் நிதி நிலை நன்றாக இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறி இருப்பது அவர் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அவர்கள் மீது காட்டமாக எல்.முருகன் பேசியிருப்பது அவரிடம் உண்மை இல்லை என்பதை காட்டுகிறது என குற்றம் சாட்டினார்.
No comments